Signed in as:
filler@godaddy.com
உச்சகட்ட
தியானம்
என்னவென்றால்
உலகமே
உன்
ஒரு
சொல்லில்
மாறுமென்றால்
அதுவே
உச்சகட்ட
தியானம்.
இவண்
ஜோதி ரமேஷ்
அருள்
என்னும்
அருவியில்
மூழ்கிவிட்டான்.
தன்கைப்பட்ட
இடமெல்லாம்
அவனாகவே
அழகான
அவதாரமாக
அவதரித்தான்.
அவதரித்து
அனைத்தையும்
அளவில்லா
ஆழ்ந்த
அன்பால்
ஆயுள் உள்ளவரை
அன்னையாய்
ஆள்கின்றான்
அவனே
ஆதியும்
அந்தமுமான
ஆண்டவன்.
இவண்
ஜோதி ரமேஷ்
குண்டலினி
சக்தியை
எழுப்பினால்
ஆயிரம்
அணுகுண்டின்
சக்திகளை
உன்
ஒவ்வொரு
அணுவிலும்
அனுபவிப்பாய்
இது
ஆபத்து
என்றால்
நிலையில்லா
இவ்வுலகின்
நிகழ்வுகளில்
எது
ஆபத்தில்லை?
இவண்
ஜோதி ரமேஷ்
மைனாக்களே
கொஞ்சம்
மெதுவாக
கூவுங்கள்
இவர்களின்
போரில்லா
கனவுகள்
கலையாதிருக்கட்டும்
இவண்
ஜோதி ரமேஷ்
மறந்தும்
மறவாதே
மனமே
மந்திரக்கோல்!
இவண்
ஜோதி ரமேஷ்
அழுகின்ற
தன்
குழந்தைக்கு
அவளால்
தரமுடிந்ததோ
அடி
மட்டும்தான்!
இவண்
ஜோதி ரமேஷ்
ஒரு
நிமிடம்
பின்
நோக்கிபாருங்கள்
பல
தடைகளை
தாண்டி
தங்கப்பதக்கம்
பெற்று
தன்னத்தனியாக
தைரியமாககம்பீர
நடைப்போட்டு
வந்துள்ளீர்கள்
இனி
எதிர்காலம்
பற்றியபயம்
எதற்கு?
படைத்தவனே
நம்முடன்பக்கத்தில்
இருக்கும்
பொழுது!
இவண்
ஜோதி ரமேஷ்
பல
பிரமாண்ட
பிரபஞ்சத்திற்கு
பயணிக்க
வேண்டுமா?
நின்ற
இடத்திலிருந்து
சிந்தனைகளை
நிறுத்தி
நித்தம்
நிகழ்காலத்தில்
நிலைத்திடு
இணையவாசல் (portal)
இக்கணமே
திறந்திடும்
இமைபொழுதில்
பாய்ந்து
பல
பரிமாண (MultiDimension)
படைப்புகளை
பார்த்து
பரவசம்கொள்!
இவண்
ஜோதி ரமேஷ்
போதும்
நீ
தினம்
தினம்
அழுது
சுருங்கியது
உன்
சிந்தனை என்னும்
சிறகு
எல்லையில்லாமல்
இன்றேவிரிந்து
பறக்கட்டும்
பிரபஞ்சம்
முழுக்க!
இவண்
ஜோதி ரமேஷ்
மூச்சுக்
காற்றின்
உயிர்நூலை
பிடித்து
சிந்தனை
சிதராமல்
தொடர்ந்துச்
சென்றால்,
உன் கனக்கும்
உடலையும்,
அலையும்
மனதையும்
இழந்து
புலனாகாத
புள்ளியாய்
மாறிடுவாய்!
இவண்
ஜோதி ரமேஷ்
எறும்புக்கு
கூட
தெரியும்
நாம்
அன்றாடம்
பயன்படுத்தும்
பண்டங்களில்
ஆயிரம்
ரசாயன
கலப்படம்
உள்ளது
என்று
அவைகளுக்கு
தெரிந்தது
ஏன்
ஆறு
அறிவு
படைத்தநமக்கு
தெரிவதில்லை?
இவண்
ஜோதி ரமேஷ்
நூற்றாண்டு
காலமாக
முடங்கி
கிடந்த
உன்
சிறகுகள்
சட்டென்று
விரிக்கட்டும்
அது
உள்நோக்கி
பறக்கட்டும்
பறந்து
பிரபஞ்சத்தின்
பிறப்பிடத்தை
அடையட்டும்!
இவண்
ஜோதி ரமேஷ்
சில
சமயங்களில்
நம்மை
படைத்த
பராசக்தியே
கையேந்தி
வருவதுண்டு,
கருணையை
காணிக்கையாககேட்டு!
இவண்
ஜோதி ரமேஷ்
உன்
பளிங்கு
பாதத்தைதொட்டு,
மணி
கணக்கில்
முத்தமிட்ட
இந்த
முத்துக்கள்
மொத்தமும்
மோட்சம்
அடைந்தன!
இவண்
ஜோதி ரமேஷ்
அவளிடம்
இருந்து
கடன்வாங்கிய
நறுமணத்திற்கு,
ரோஜாக்கள்
வரிசையில்நின்று
கப்பம்
கட்டின!
இவண்
ஜோதி ரமேஷ்
அவளை
பிரிந்து
பயணிக்கும்
ஒவ்வொரு
நொடியிலும்
அடி
மனதில்
இமயமலையும்
அதில்
ஏறும்
ஆயிரக்கணக்கான
மனிதர்களையும்
சேர்ந்து
சுமக்கும்
கனத்தை
உணர்கின்றேன்!
இவண்
ஜோதி ரமேஷ்
இசையின்
அழகையும்,
அதை
மெய்மறந்து
மீட்டும்
அவளின்
அடிமனதின்
ஆழத்தில்
நிலவும்
அமைதியையும்
கிரகித்து
உணர
ஆண்
தன்மைகொண்ட
இரண்டு
கண்கள்
பயன்படாது,
பெண்
தன்மை
கொண்ட
இரண்டுகாதுகள்
மட்டுமே
பயன்படும்!
இவண்
ஜோதி ரமேஷ்
நேரமாக
நேரமாக
என்னுள்ளே
கொஞ்சம்
கொஞ்சமாக
நுழைகின்றாயடி,
ஆயுதப்
படைபோல்
இதயத்தில்
இடைவிடாமல்
குண்டு
போடுகின்றாய்.
இதமாகத்தான்
இருக்கிறதடி
இதுவும்!
இவண்
ஜோதி ரமேஷ்
நீ
சிந்தும்
வார்த்தைகளில்
இருந்து
வண்ணங்களை
மட்டும்
பிரித்து
எடுத்து
வானில்
தூவினேன்.
என்ன
ஆச்சரியம்,
இந்த
இருண்ட
இரவிலும்
இனிமையான
வானவில்
இங்கு.
இவண்
ஜோதி ரமேஷ்
உன்னை
கண்டு
என்ன
பேச,
திருவிழாவைக்
கண்டு
திகைக்கும்
சிறு பிள்ளை
போல
சிதறிப்போனேனடி.
இவண்
ஜோதி ரமேஷ்
உன்னை
பிரிந்து
உயிரை
அடமானம்
வைத்து,
இந்த
வார்த்தைகளை
வட்டிக்கு
வாங்கினேன்.
நீ
இல்லையேல்
ஏது
எனக்கு
வாழ்க்கை?
இவண்
ஜோதி ரமேஷ்
உண்மையில்
யாருடா நீ?
குழந்தையாகவருகிறாய்,
அடுத்த
கணம்
குமரியாய்
வருகிறாய்,
மறுகணம்
மன்னனாக
வருகிறாய்,
அனுதினம்
குருவாய்
வருகிறாய்.
இன்றோ
என்னுள்ளே
வந்து
ஆட்சி
செய்கிறாயடா.
இவண்
ஜோதி ரமேஷ்
தலைவி
தரையிறங்கி
வந்தாள்
சொர்க்கத்திலிருந்து.
ஒரே
ஒரு
பார்வை
என்னை
பார்த்தாள்.
அடிமனதில்
இடி
மின்னல்கள்,
இரு
விழிகளிலும்
ஆனந்த
மழைத்துளிகள்.
உயிர்
பூக்கள்
மட்டும்
பூத்து
ஒன்றுக்கொன்று
உரசிக்கொண்டு
முந்திக்
கொண்டு
வந்து
என்னை
முத்தமிட்டன!
இவண்
ஜோதி ரமேஷ்
உடலுறவு
என்பது
ஒரு
மாயத்திரை,
அதை
விலக்கிப்
பார்.
அண்டமெல்லாம்
அனுதினம்
அனைத்திலும்
ஊடுருவி
ஒன்றாய்
என்றும்
ஓங்கி
உறவாடுகின்றது
என்பது
பளிச்சிடும்.
இவண்
ஜோதி ரமேஷ்
என்னே
உன்
தீவிரம்!
இந்த
இருண்ட
மாயையை
இரு
கண்கள்
திறந்த
நிலையிலேயே
ஞான
ஒளி
கொண்டு
நறுக்கி
எறிந்தாயடா.
உன்னுள்
சரணடைந்தேன்,
என்னைக்
காத்தருள்வாயடா.
இவண்
ஜோதி ரமேஷ்
ஒரு
பெண்ணை
நிர்வாணமாக
பார்த்தும்
அவளின்
அங்கங்கள்
தாண்டி
அடி மனதை
ஊடுருவி
பார்ப்பவனே
தந்த்ரிகன்
இவண்
ஜோதி ரமேஷ்
உடல்கள்
மட்டும்
உரசினால்
உஷ்ணம்
மட்டுமே
உண்டாகும்.
மாறாக
உடலைத்
தாண்டி
உள்ளுக்குள்
உள்ள
உண்மையை
கண்டு
உருகினால்
உயிரணுக்களில்
அமுதம்
ஊற்றெடுக்கும்!
இவண்
ஜோதி ரமேஷ்
என்
கண்கள் மட்டுமல்ல
என்
கவிதைகளும்
என்
கண்ணீரில் மூழ்கின
என்ன
காரணம்
என்றெண்ணினேன்
காரணத்தை
என்
கன்னத்தில் உரைந்த
என்
கண்ணீர் கலங்கிக்கொண்டே
என்னிடம்
காண்பித்தது
என்
கண்ணிலும்
எண்ணிலடங்கா
கலவரம் என்று
எப்படி என்றேன். கண்ணிலுள்ள
கருப்பருக்கும் வெள்ளையருக்கும்
எழுந்த
கலவரத்தால்
என்
கண்ணீரெல்லாம்
என்
கண்களைவிட்டு
என்
கன்னத்தில் குடிபுகுந்தன
என்றும்
கலங்குகின்ற அகதிகளாக!
இவண்
ஜோதி ரமேஷ்
அன்பே
சிவம்,
அறிவே
சிவம்,
அருளே
சிவம்,
அனைத்தும்
சிவமே.
இதில்
எது
சிவம்
இல்லை
என்றால்?
ஒன்றும்
இல்லை.
ஓங்காரமாய்
ஒலியிலும்
ஒளியிலும்
ஒய்யாரமாய்
ஒளிந்து
கொண்டிருக்கிறான்.
ஒன்றா
இரண்டா
அவனின்
திருவிளையாடல்கள்.
ஓராயிரம்
கோடி கைகள்
கொண்டு
அனைத்து
உயிர்களையும்
படைத்து,
காத்து,
அழித்து
அடுத்த
பரிணாமத்திற்கு
அவர்களை
அலுக்காமல்
அழைத்துச்
செல்கின்றான்.
அவனின்
திருவடி சரணம்
செய்வோம்
அனைத்துத்
துயரையும்
அக்கணமே
துடைத்தெறிவான்!
இவண்
ஜோதி ரமேஷ்
வருகிறான்
என்
ஈசன்
வானை
தன்வசம்
வளைத்து
தைத்து
அனிந்தவன்
வென்மதியை
தலைமுடியில்
விளையாட்டாக
சூடிக்கொண்டவன்
உடுக்கை
கொண்டு
பிரபஞ்சத்தை
ஒரு
நொடியில்
உருவாக்கியவன்
முக்காலத்தையும்
திரிசூலத்தில்
பட்டு
நூலைப்
போல்
பதட்டமின்றி
திரிப்பவன்
கட்டாத
தன்
கரு
முடியில்
கருணை
கொண்டு
பக்தர்களை
கட்டிக்கொள்பவன்
பார்கடலை
பாம்பைக்
கொண்டு
கடைந்து
நஞ்சுண்டவன்!
இவண்
ஜோதி ரமேஷ்
உயிர்களின்
உன்னத
தேடல்
தந்த்ரா
உன்னுள்ளே
ஒளிந்திருக்கின்றது
ஓராயிரம்
ஓல்ட்
மின்னலைப்
போல் சக்தி.
அவளை
அடிமனம்
கொண்டு
அரவணை
அனைத்தும்
அழகாகும்!
இவண்
ஜோதி ரமேஷ்
என்ன
சொல்வது,
எப்படி
சொல்வது,
எதை
சொல்வது,
என்றும்
என்
சிவன்
என்னுள்
நித்தம்
நாட்டியம்
ஆடுகின்றான்
என்பதை!
இவன்
ஜோதி ரமேஷ்
அருவமாய்
அருள்
அளிக்க
வந்த
அர்த்தநாடிஸ்வரனே
அன்றே
உன்னை
கண்டு
கொண்டேன்
அது
கனவு
என்று
எண்ணினேன்.
இன்றே
உணர்ந்தேன்
அதுவே
உண்மை
இதுவே
கனவு
என்று!
இவண்
ஜோதி ரமேஷ்
வேதங்கள்
அவனை
வேண்டி
வெகுகாலம்
காத்திருக்க,
வெறும்
பிதற்றும்
பிண்டமாக
திரிந்த
என்னை
வந்து
சட்டென்று
ஆட்கொண்டான்.
என்ன
தவம்
செய்தேன்?
என்ன
செயல்
செய்தேன்?
சிவனே
வந்து
என்
சிந்தனையில்
சிந்தனைகளை
சிறையிலடைத்து
செம்மையாக
செழிக்க!
இவண்
ஜோதி ரமேஷ்
பிரபஞ்சமே
தாயாகி
தான்
படைத்த
அனைத்து
உயிர்களுக்கும்
எங்கேயும்
எப்போழுதும்
தயங்காமல்
தங்கு
தடையின்றி
அளவில்லா
அருளை
பாலுட்டுகையில்
பயப்பட
என்ன
இருக்கின்றது?
இவண்
ஜோதி ரமேஷ்
அண்டமெல்லாம்
ஆனந்தத்தில்
அதிருமடா
அவனின்
உடுக்கை
ஒலியை
கேட்டால்
பிண்டமெல்லாம்
பரவசத்தில்
பிதற்றுமடா
அவனின்
அருள்
ஒளியை
கண்டால்
இவன்
ஜோதி ரமேஷ்
இருளை
அகற்ற
வந்தவன்
தன்
அருளை
என்மீது
எல்லையில்லாமல்
வாரி
இரைத்தவன்
தவமாய்
தவமிருந்தேன்
அவனின்
முகம்
காண.
கண்டுகொண்டேன்
காலடிகளை
காணவிரும்புகின்றேன்
கருணைததும்பும்
கருவிழிகளை
இந்த
குரு
பௌர்ணமியில்!
இவண்
ஜோதி ரமேஷ்
பல
புத்தாயிரம்
காலமாக
கருவுற்று
இருக்கிறாள்
கருணையே
வடிவமான
பூமாதேவி
என்ன
தவம்
செய்தாளோ?
சிவனையே
அருள்மிகு
கைலாச
மலையாக
தன்
கருவில்
சுமக்க.
இன்றும்
இறக்கிவைக்க
மறுக்கின்றாள்!
இவண்
ஜோதி ரமேஷ்
கிருஷ்ணனின்
காலடி
சுவடுகளே
Gravitational
Waves
On
Cosmic
Background
அது
அவனின்
பக்தர்களின்
அடிமனதில்
நேரம்
காலத்தை
அடியோடு
அழித்துவிடும்!
இவண்
ஜோதி ரமேஷ்
பிரபஞ்சத்தின்
பிரமாண்ட
படைப்பின்
பிரதிபலிப்பே
உன்
பின்னப்படாத
கூந்தலோ?
இவண்
ஜோதி ரமேஷ்
அவனின்
மூச்சு
காற்று
பட்டு
சட்டென்று
பூத்தது
அவளின்
இரு
விழிகள்!
இவண்
ஜோதி ரமேஷ்
இயற்கை
அன்னையின்
இதழ்களில்
இருந்து
சிந்திய
உமிழ்நீரே
பூக்களின்
கன்னித்
தேன்!
இவண்
ஜோதி ரமேஷ்
அருவமாய்
விளங்கும்
பேரொளியே
எங்கள்
ஆருயிர்
அல்லா
உங்கள்
அருளெனும்
அடைமழையில்
அனைத்து
உயிர்களும்
அன்றாடம்
அடி
மனது
வரை
குடையின்றி
நனைந்து
உயிரெனும்
பூ உள்ளே
மலரட்டும்!
இவண்
ஜோதி ரமேஷ்
எட்டாத
உயரத்தில்
பூக்களையும்
பழங்களையும்
வைத்த
இயற்கை
அன்னை
தன்
பிள்ளைகள்
பசி
என்று
நின்றால்
துடித்திடுவாள்
அவளே
அனைத்தையும்
பறித்து
தருவாள்!
இவண்
ஜோதி ரமேஷ்
உன்
மரண
பயத்திற்கே
எமனாய்
இருப்பான்
ஏகாம்பரநாதன்
ஒரு
கணம்
அவனை
அனுமதித்தால்
மறு
கணமே
உயிருடன்
இருக்கும்
போழுதே
உன்
அனைத்து
பயங்களுக்கும்
பாடை
கட்டி
தீமூட்டி
உன்
கைகள்
கொண்டே
தகனம்
செய்வான்!
இவண்
ஜோதி ரமேஷ்
தோழியாக
என்
தோளில்
சாய்ந்தாய்
தொலைத்துவிட்டேன்
என்
துயரங்களை!
இவண்
ஜோதி ரமேஷ்
வெடிகுண்டின்
மேல்கூட
உனக்கு
நம்பிக்கை
இல்லையா?
இவண்
ஜோதி ரமேஷ்
நீ
அழுகையில்
அருகில்
இருப்பேன்
என்றேன்
அதனால்தான்
உன்னை விட்டு
விலகியிருக்க
ஆசைப்படுகின்றேன்!
இவண்
ஜோதி ரமேஷ்
நிலாவை
காட்டினாய்
ரசித்தேன்.
நிலாவை
காட்டும்
உன்
நீண்ட
விரலை!
இவண்
ஜோதி ரமேஷ்
யாரது
பூவின்
இதழின்மேல்
இலைகளை
வைத்தது?
இவண்
ஜோதி ரமேஷ்
உண்மையான
உறவுகள்
உள்ளத்தில்
உண்டாகும்
உணர்வுகள் அவை
உணர்ச்சிகளல்ல
உரைப்பதற்கு!
இவண்
ஜோதி ரமேஷ்
நடு
கடலில்
மட்டும்
சிப்பிகள்
வாய்திறந்து
மழை
துளிகளை
சேர்த்து
முத்துக்கள்
செய்வதில்லை
சில
நேரங்களில்
நகரங்களில்
கூட
நடமாடும்
மழலை
சிப்பிகள்
இருப்பதுண்டு
இவளைப்
போல்!
இவண்
ஜோதி ரமேஷ்
தனக்கு
இல்லை
என்றாலும்
தவறாமல்
தானம்
செய்கின்ற
மனமே
தாய்
மனம்
அது
அனைத்து
உயிர்களிடமும்
விதையாய்
இருக்கின்றது
அதை
அன்றாடம்
தன்னை
ஊற்றி
வளர்ப்போம்!
இவண்
ஜோதி ரமேஷ்
அண்டசராசரம்
எல்லாம்
அடங்கி
உள்ள
உங்கள்
காந்த
சக்தியை
திரட்டி
ஒரு
நொடி
ஒருமுகப்படுத்தி
இரு
புருவங்களுக்கு
மத்தியில்
உள்ள
நெற்றிப்பொட்டில்
நிறுத்துங்கள்
சிந்தனைகள்
நின்று
பிரபஞ்சமே
பேரின்பத்தில்
பட்டுக்கம்பலம்
விரிக்க
சிவன்
வீர
நடைப்போட்டு
நடந்து
வருவான்!
இவண்
ஜோதி ரமேஷ்
ஒளியின்
உறைவியே
(condense form)
கண்கள்
ஒலியின்
உறைவியே
காதுகள்
உயிரின்
உறைவியே
உடல்
பிதாவின்
உறைவியே
பிரபஞ்சம்
எனது
கற்பனைகளின்
உறைவியே
இந்த
கிறுக்கல்கள்!
இவண்
ஜோதி ரமேஷ்
தெரு
வீதியில்
இந்த
புத்தங்கள்
கிடந்தாலும்
ஒவ்வொன்றும்
ஒரு
சமுதாயத்தையே
தோல்
உரித்து
உள்
சென்று
உண்மையில்
யார்
அவர்கள்
என்பதை
சுட்டிக்
காட்டும்
வீரிய
விதை
கொண்டவைகள்!
இவண்
ஜோதி ரமேஷ்
உருவமில்லா
உயர்ந்த
மாமருந்தே
உன்னை
உருண்டைப்பிடித்து
ஒரு
வாய்
உண்டபின்பு
உடைந்த
உடலும்
உயிரும்
பேரானந்தத்தில்
ஊஞ்சலாடுதே
பிணியெல்லாம்
உன்
உள்ளொளியால்
பனிப்போல்
விளகுதே!
இவண்
ஜோதி ரமேஷ்
உரிமைகள்
உணர்வுகள்
உடைமைகள்
இழந்து
உடலும்
உயிரும்
உருகி
உனக்காக
உழைத்து
உடைந்த
உழவர்களை
உண்ணும்
உணவுள்ளவரை
மறவாதீர்!
இவண்
ஜோதி ரமேஷ்
பிறந்த
எல்லா
குழந்தைகளிடமும்
இறைவன்
இமைப்பொழுதும்
நீங்காமல்
உள்ளான்
பொதுவான
அவனை
இந்த
இனம்
இந்த
ஜாதி
இநத
மதம்
இந்த
மொழி
இந்த
நாடு
என
கூறுபோட
வேண்டாம்!
இவண்
ஜோதி ரமேஷ்
அவள்
கை
அசைவின்
நுணுக்கங்களை
காண
ஆயிரம்
கண்களும்
போதாது
பல
புகைப்பட
கருவிகள்
கொண்டு
ஒரே
நேரத்தில்
புகைப்படம்
எடுத்தும்
அவை
புலப்படவில்லை!
இவண்
ஜோதி ரமேஷ்
Copyright © 2025 Jothi Ramesh - Intuitive Life Coach - All Rights Reserved.
Powered by Cosmic Consciousness
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.